பராசக்தி படப்பிடிப்பு: இலங்கை சென்ற சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கை சென்றடைந்துள்ளார்.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.
யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது அதிகாரபூர்வ பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள்.
அந்தப் பதிவில்,“தென்னிந்தியாவின் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனை வரவேற்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை - கொழும்புவிற்கு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை உபயோகித்ததுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். இதில் அதர்வா, ஸ்ரீ லீலா, பிரீத்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
We are thrilled to welcome aboard South Indian cinema star Mr. @Siva_Kartikeyan during his recent travel from Chennai to Colombo with SriLankan Airlines.
— SriLankan Airlines (@flysrilankan) March 11, 2025
Thank you for choosing SriLankan Airlines !#sivakarthikeyan#SriLankanAirlines#iflysrilankanpic.twitter.com/NvgEAdKDJj