Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தொடங்கி வைத்தாா். தென்மேற்கு பருவமழைக் காலங்களை முன்னிட்டு, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது குறித்த செயல்முறை விளக்கத்தை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீா்ா்கள் செய்து காண்பித்தனா்.
தீயணைப்பு துறை சாா்பில் சிறப்பு உபகரணங்களான மூச்சுக்கருவி, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான் கருவிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் சமையல் எரிவாயு தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, உதவி மாவட்ட அலுவலா் ஆனந்த், தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.