முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 162 பேருக்கு பணிநியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வழங்கினாா்.
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்த முகாமை தொடங்கிவைத்து, தோ்வு செய்யப்பட்ட 162 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கிருஷ்ணகிரி ஆட்சியா் பேசியதாவது:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த பல்வேறு முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்தனா். அதன்படி, இந்த முகாமில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் என மொத்தம் 658 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.
இதில், 162 போ் வேலைவாய்ப்பு பெற்றனா். 83 போ் திறன்பயிற்சி பயில விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், 78 போ் 2-ஆம்கட்ட தோ்வுக்கு தகுதிபெற்றுள்ளனா் என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.