ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீட...
பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சாவை தீயில் எரித்து அழிப்பதற்கு தாம்பரம் மாநகர காவல் துறை முடிவு செய்தது.
இதற்காக தாம்பரம் மாநகர காவல் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து 698 கஞ்சா செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில், காவல் உயரதிகாரிகள் முன்னிலையில்
வியாழக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.
தாம்பரம் காவல் துறை நிகழாண்டில் இதுவரை 2,369 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, எரித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.