செய்திகள் :

பல்கலை., பட்டமளிப்பு விழா விவகாரம்; `கட்சியில் பெயர் வாங்க தரங்கெட்ட நாடகம்!' - அண்ணாமலை கண்டனம்

post image

தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தென் மாவட்டங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல மாணவிகள் தங்களது பட்டங்களை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப் மட்டும் ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாழ்த்து பெற்று மேடையில் இருந்து இறங்கினார்.

ஜீன் ராஜன்
ஜீன் ராஜன்

கைகளை நீட்டிக்கொண்டிருந்த ஆளுநருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. இருந்த போதும் ஆளுநர் சிரித்து, அந்த மாணவியை வாழ்த்தி அனுப்பினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜீன் ஜோசப், ``ஆளுநர் தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் நான் பட்டம் பெற விரும்பவில்லை. இதனால் தான் எனது பட்டத்தை துணைவேந்தரிடம் கொடுத்து வாங்கினேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இது சம்பவம் குறித்து விமர்சித்திருந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க-வினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க-வின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். தி.மு.க-வைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'கோர்ட் சொல்லிட்டாங்க கலைஞ்சிடுங்க, இல்லன்னா..!' - கடைசி மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில், போராடுபவர்களை காவல்துறை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

"முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியால்தான் நடுத்தெருவில் நிற்கிறோம்" - LTUC தலைவர் பாரதி

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க

``தமிழிசை சௌந்தரராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயற்சி"- நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தில்லு முல்லு வெற்றி... மோசமான தேர்தல் ஆணையம்! ராஜினாமா செய்வாரா பிரதமர்? | கோ.பாலச்சந்திரன்

நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதில்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றனவா என்றால், பெ... மேலும் பார்க்க

Pakistan: "ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது" - ஷெபாஸ் ஷெரிஃப் எச்சரிக்கை!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தத்துக்கு வந்தாலும், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் இருந்து இந்தியா பின்வாங்காது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.முன்னதாக சிந்து நதி நீரை நிறுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான்

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க