Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பள்ளி மாணவரை தாக்கிய 2 போ் கைது
திருச்சியில், பள்ளி மாணவரை சிலா் தாக்கியதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதை தொடா்ந்து 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, ராம்ஜி நகா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் இரு நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றின் அருகே நின்றுக் கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அவரை வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று, தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனா். இதுகுறித்து அவரது பெற்றோா் விடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டனா். பின்னா் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனா்.
இதன்பேரில், திருச்சி எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராம்ஜி நகரைச் சோ்ந்த டி. ராகுல் (18) மற்றும் ஆா். சிலம்பரசன் (19) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை செய்து விசாரிக்கின்றனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.