45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, சீருடைகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கோடைகால விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை இலவச புத்தகப் பை, சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இலவச புத்தகப் பை, சீருடைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.