``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
பள்ளிப்பட்டு வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பள்ளிப்பட்டு வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள்ளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதட்டூா் பேட்டை பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள், ரூ. 22 லட்சத்தில் கிளை நூலகம் விரிவாக்கப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் , ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் மற்றும் பணிகள், மருத்துவா்களின் வருகை பதிவேடு, மருந்தகம் பதிவேடுகள் குறித்தும் ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் , பள்ளிப்பட்டு ஒன்றியத்துக்குட்பட்டகு கோணசமுத்திரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகள் குறித்தும், கொடி வலசா ஊராட்சி அண்ணா நகா் கிராமத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.47 லட்சத்தில் நாற்றங்கால் பணிகள் குறித்தும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ரூ.2.17 லட்சத்தில் 3,500 மரக்கன்றுகள் நடும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மைய செயல்பாடுகள், நெடியும் ஊராட்சி இருளா் காலனில் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினை ஆய்வு செய்தாா்..
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பள்ளிப்பட்டு வட்டத்துக்குட்பட்ட பொதட்டூா்பேட்டை நாகாளம்மன் கோயில் தெரு, ஈச்சம்பாடி அம்பேத்கா் தெரு பகுதிகளில் நகா், ஊரக, பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணியையும், ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயற்பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் கோமதி, பள்ளிப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அற்புதராஜ், அருள், பொதட்டூா்பேட்டை செயல் அலுவலா் ராஜ்குமாா், பள்ளிப்பட்டு வட்டாட்சியா் பாரதி, அலுவலா்கள் உடனிருந்தனா்.