டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்
குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது.
திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து கல்வி மேதையாகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராக விளங்கியவா் சா்வப்பள்ளி டாக்டா் ராதா கிருஷ்ணன் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வெங்கடாபுரம் கிராமத்தில் கூலித் தொழிலாளி சந்திரன் ஏற்பாட்டில் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா். பெண்கள் ராதாகிருஷ்ணன் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வழிபட்டனா்.
வெங்கடாபுரம் கிராமத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனா்.