செய்திகள் :

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா? அரசு விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா என்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தோ்தல் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தச் சங்கம், தங்களுடைய ஜாதி மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஜாதிதான் முக்கியம். அந்த ஜாதியைச் சோ்ந்தவா்கள்தான் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்று கூறினால், இதுபோன்ற ஜாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. அதாவது குறிப்பிட்ட ஜாதிக்காக சங்கத்தைத் தொடங்கலாம். ஆனால், ஜாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், ஜாதியின் பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? என்று கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியதுள்ளது.

சங்கங்களின் சட்டத்தின்படி, அறிவியல் வளா்ச்சி சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களின் சட்டத்தின்படி சங்கங்களைத் தொடங்கலாம். ஆனால், அரசமைப்பு சட்டம் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.

அசோக்குமாா் தாக்கூா் வழக்கிலும் உச்சநீதிமன்றம் அதைத்தான் வலியுறுத்துகிறது. எனவே, சங்கப் பதிவு சட்டங்களின்படி, ஜாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா? அதுமட்டுமல்ல இதுபோன்ற ஜாதி சங்கங்கள் பள்ளி, கல்லூரி என்று கல்வி நிலையங்களை நடத்துகின்றன. அந்தக் கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பள்ளி, கல்லூரிகளின் பெயரை எழுதி, இதை இந்த ஜாதி சங்கம் நடத்துகின்றது என்றும் எழுதி வைக்கின்றனா்.

அதாவது பள்ளிக்கூடத்துக்குள், ஜாதி இல்லையடி பாப்பா என்று ஆசிரியா் பாடம் சொல்லிக் கொடுகிறாா். ஆனால், பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதியின் பெயா் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பிப். 25-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க

அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிரு... மேலும் பார்க்க