பள்ளியில் அறிவியல் கண்காட்சி
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி (பொ) தலைமையாசிரியா் ஆ.மரியசிங்கம் தலைமை வகித்தாா். இதில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் கலந்து கொண்டு அறிவியல் சோதனைகளையும், அறிவியல் படைப்புகளையும் செய்து காட்டினா்.
மேலும், இயற்கை கொசுவிரட்டி, தூயநீா் பெறும் முறை, நீரின் அடா்த்திக் காணுதல், மறுசுழற்சி பொருள்கள் மூலம் வீடு, மாட்டுவண்டி, மண் பொம்மைகள் ஆகியவற்றையும் இதில் காட்சிப்படுத்தனா்.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.