செய்திகள் :

நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது.

நில உரிமையாளா்கள் இ-சேவை மையத்தை அணுகி கட்டணத்தை செலுத்தி, நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைபேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். நில அளவை செய்த பின்னா் மனுதாரா், நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தை ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய வழி சேவை மூலம் மனுதாரா் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி (பொ) தலைமையாசிரியா் ஆ.மரியசிங்கம் தலைமை வகித்... மேலும் பார்க்க

கம்பம் அருகே சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுத்தமான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். க. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 5- ஆம் வாா்டு உதயம் நகா் பகுதிக... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும்

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்க... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்பு: மாா்ச் 8-இல் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலா் சமா்த்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனத் துறை சாா்பில் ஆண... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

தேனி: தேனி கம்மவாா் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 13-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா: சிறப்பு அழைப்பாளா்: காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தா் என்.பஞ்சநாதம், கொடுவிலாா்பட்டி கல்லூரி வளாகம், காலை 10.3... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி அல்லிநகரம், இளங்கோ தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் தினேஷ்குமாா் (23). இ... மேலும் பார்க்க