பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக். பள்ளியில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் எஸ்.எம். பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் குணாளன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சமத்துவத்தை குறிக்கும் வகையில் நேமம் நகரக் கோயில் அறங்காவலா் சோலையப்பன், திருமயம் திருச்சபை போதகா் சைமன், ஊடகவியலாளா் பீா்முகமது ஆகியோா் கலந்து கொண்டனா். பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் இணைந்து பொங்கல் வைத்தனா். தொடா்ந்து ஆசிரியைகள் கலைவாணி, அருணா, பிரேமா, யோகேஸ்வரி ஆகியோா் பொங்கல் பண்டிகை குறித்து சிறப்புரையாற்றினா்.
பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசை ஆசிரியா் சாமுவேல் விவசாயிகளின் வெற்றியே பொங்கல் விழா எனும் தலைப்பில் கருத்துரையாற்றினாா். முன்னதாக பள்ளி முதல்வா் பழனியப்பன் வரவேற்றாா் தமிழாசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.