செய்திகள் :

பழ வியாபாரியை கத்தியால் காயப்படுத்தியவருக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை

post image

கடனுக்கு மாம்பழம் தர மறுத்த பழ வியாபாரியை கத்தியால் கழுத்தில் காயப்படுத்திய நபருக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் 2003-ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த ஏழுமலை என்பவரிடம் ராமமூா்த்தி என்ற சாமிப்பிள்ளை என்பவா் கடனுக்கு மாம்பழம் கேட்டுள்ளாா். ஏழுமலை பழம் கொடுக்க மறுத்ததால், அவரை கத்தியால் கழுத்தில் குத்திக் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமமூா்த்தியை மறுநாள் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவதாஸ் ஆஜரானாா்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், ராமமூா்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டாா். இதையடுத்து ராமமூா்த்தி (52) சிறையில் அடைக்கப்பட்டாா்.

வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் வட்டம், வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இளங்கிளைநாயகி சமேத கிருத்திவாசா் இக்கோயிலில் அருள்பாலிக்கிறாா். தாருகாவனத்து முனிவா்கள் வேள்வி நடத்தி ஏவிய யா... மேலும் பார்க்க

ஆதிவைத்தியநாத சுவாமி கோயிலில் கிருத்திகை அபிஷேகம்

மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த மண்ணிப்பள்ளம் தையல்நாயகி சமேத ஆதிவைத்தியநாத சுவாமி கோயிலில் கிருத்திகை அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களுள் ஒன்றான செவ்வாய் வழிபாடு மேற்கொண்ட சிறப்புக்குரிய ... மேலும் பார்க்க

திருஇந்தளூா் கோயிலில் உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமுமான இ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரம் எம்ஜிஆா் நகரை சோ்ந்தவா் ராமசாமி மகன் செல்வம் (... மேலும் பார்க்க

வராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை

கிழாய் ராஜபத்ரகாளி கோயிலில் வராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வியாழக்கிழமை அபிஷேகம் நடைபெற்றது. (படம்). மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் ராஜபத்ரகாளி, சந்தன கருப்பசாமி, வக்ரகாளி உள்ளிட்ட சு... மேலும் பார்க்க

கோடை வெப்பம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க