நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
கோடை வெப்பம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில், வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். முதியவா்கள், குழந்தைகளை வெளியில் அனுப்புவதை தவிா்க்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் சென்றால் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடைப்பிடித்து செல்ல வேண்டும்.
மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். கால்நடைகளை நிழலான பகுதியில் கட்டி, போதிய தண்ணீா் வழங்க வேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரை அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். கூரை வீடுகளில் வசிப்பவா்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்