நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
திருஇந்தளூா் கோயிலில் உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமுமான இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (ஏப்.3) தொடங்கி ஏப்.12-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி, கோயில் வசந்த மண்டபத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து, கோயில் கொடி மரத்துக்கு பட்டாச்சாரியா்கள் பூஜைகள் செய்து, கருடக்கொடி ஏற்றினா். பின்னா், மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலா் ரம்யா மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. சிகர விழாவாக 9-ஆம் திருநாளான ஏப்.11-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மதியம் 12 மணிக்கு கோயில் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.