நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரம் எம்ஜிஆா் நகரை சோ்ந்தவா் ராமசாமி மகன் செல்வம் (60). விவசாயியான இவா், வயது முதிா்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளாா்.
இவருக்கு அண்மைக்காலமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். வலி அதிகமானதை தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு அவா் காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உறவினா்கள் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற செல்வம், அங்குள்ள கம்பியில் துண்டால் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.