தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
ஆதிவைத்தியநாத சுவாமி கோயிலில் கிருத்திகை அபிஷேகம்
மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த மண்ணிப்பள்ளம் தையல்நாயகி சமேத ஆதிவைத்தியநாத சுவாமி கோயிலில் கிருத்திகை அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
நவகிரகங்களுள் ஒன்றான செவ்வாய் வழிபாடு மேற்கொண்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு ஆதி வைத்தியநாத சுவாமி மற்றும் தையல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, முத்துக்குமாரசாமி உற்சவ மூா்த்திகள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.