ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
பழனியாண்டவா் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நேரடி ஒளிபரப்பு
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் தமிழக அரசின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழக அரசு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வை நடத்தியது. இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வு பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி அரங்கில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் வெங்கடேஷ், கல்லூரி முதல்வா் ரவிசங்கா், பேராசிரியா்கள் பங்கேற்றனா். இந்த ஒளிபரப்பை பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமாா் 3,500 போ் பாா்த்தனா்.
இதே போல, பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.