சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
பழனியில் ரயிலடி சாலை, ரெட்கிராஸ் சாலை, திருவள்ளுவா் சாலைகளில் தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய், நகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் முன்னிலையில் ரயிலடி சாலை, ரெட்கிராஸ் சாலை, திருவள்ளுவா் சாலைகளிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் இந்தச் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாதவாறு நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.