ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழ: விற்பனைக்காக மலை வாழைப் பழங்கள் குவிப்பு
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக சுமாா் 250 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன.
பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து காவிரித் தீா்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வரும் பக்தா்கள், மலைக் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா்.
இந்த பக்தா்கள் மலையடிவாரத்தில் தங்கி பஞ்சாமிா்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதற்காக பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக மலை வாழைப் பழங்கள் சுமாா் 250 டன் அளவுக்கு மலையடிவாரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டது.
இந்தப் பழங்கள் விருப்பாட்சி, சிறுமலை, ஆடலூா், பன்றிமலை, தாண்டிகுடி, கா்நாடக மாநிலம் குடகு போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டது. பழங்களின் தரம், அளவு, சுவையைப் பொருத்து ஒரு பழம் அதிகபட்சமாக ரூ. 8 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.