பழனியில் பலத்த மழை
பழனியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது. பழனி மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூா், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திடீா் மழை காரணமாக குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.