தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
பழைமையான கட்டடத்தில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு
சென்னை தியாகராய நகரில் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (71). இவா், சென்னை தியாகராய நகா் நீலகண்ட மேத்தா தெருவில் ஒரு தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் காவலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு அந்த வளாகத்திலேயே ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரையுடன் கூடிய ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்த அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் அந்த அறையில் இருந்த மாணிக்கம் தீயில் கருகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
தகவலறிந்து அங்கு வந்த மாம்பலம் போலீஸாா், மாணிக்கம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.