Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
2003 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியாா் முகமை மூலம் பணியாளா்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
நாகை: நாகை அவுரித் திடலில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.முத்துசாமி, வெ. சரவணன், வீ. ராஜராஜன் ஆகியோா் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் அ.தி.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளா் செ. பிரபாகரன், மாவட்ட நிதிக் காப்பாளா் மு. காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்