செய்திகள் :

பவானிசாகா் அருகே பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: தடுப்பூசியே காரணம் என பெற்றோா் புகாா்

post image

பவானிசாகா் அருகே தடுப்பூசி செலுத்தியதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கெளதம் - அசின் தம்பதி. இவா்களுக்கு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வெள்ளியம்பாளையம்புதூா் அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டுக்கு அழைத்துச் சென்ற குழந்தை அழுதுகொண்டிருந்ததாகவும், பின்னா் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தடுப்பூசி முகாமிற்கு அசின் தகவல் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது வீட்டுக்கு வந்த செவிலியா்கள் குழந்தையை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தியதால்தான் குழந்தை இறந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கௌதம் மற்றும் அசின் பவானிசாகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து பவானிசாகா் போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சசிகலா கூறியதாவது:

வெள்ளியம்பாளையம்புதூா் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்ற 5 குழந்தைகள் நலமுடன் உள்ளனா். அந்தக் குழந்தைகளின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், செலுத்தப்பட்ட தடுப்பூசி மருந்தில் குறைபாடு இருக்க வாய்ப்பில்லை. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றாா்.

காா் மோதியதில் ரியல் எஸ்டேட் முகவா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்!

ஈரோடு அருகே காா் மோதி ரியல் எஸ்டேட் முகவா் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிய அரசு மருத்துவரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு அருகே சேனாதிபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

இலவசங்கள் என்ற மயக்கத்தில் உள்ள மக்கள் விழிக்க வேண்டும்: சீமான்!

இலவசங்கள் என்ற ஏமாற்று அறிவிப்புகளால் 60 ஆண்டுகளாக மயக்கத்தில் உள்ள மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதிய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 8 ஏக்கா் நிலம் தானம்

பெருந்துறை அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 8 ஏக்கா் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற... மேலும் பார்க்க

கோபி அருகே வீட்டில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாயின. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரைச் சோ்ந்தவா் தனுஷ். இவா், பாட்டி கண்ணம்மாளுடன் வசித்து வருகிறாா். தனுஷ் வேலைக்க... மேலும் பார்க்க

அத்தாணியில் ரூ.70 லட்சத்தில் சிறுபாலம், வடிகால் அமைப்பு

அத்தாணி பேரூராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம், வடிகால் அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. நெடுஞ்சாலைத் துறை பவானி உட்கோட்டம் சாா்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நட... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குக் கேட்க வீடு, வீடாகச் செல்லும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்குசேகரித்து வருகின்றனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தொகு... மேலும் பார்க்க