செய்திகள் :

பாகிஸ்தானில் மீண்டும் பஞ்சாப் பயணிகள் கடத்தி கொலை! 9 பேரது உடல்கள் மீட்பு!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பேருந்தில் சென்ற பஞ்சாப் மாகாணப் பயணிகளை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று சுட்டுக்கொன்றுள்ளனர்.

வடக்கு பலூசிஸ்தானிலுள்ள ஸோப் பகுதியில் அருகில், நேற்று (ஜூலை 10) இரவு சென்ற பேருந்தை ஆயுதம் ஏந்திய நபர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர், அதிலிருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி அவர்களது அடையாள அட்டைகளை வாங்கி சோதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தில் பயணித்த பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பயணிகளை மட்டும் கடத்திச் சென்று அந்த மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றதாகவும், தற்போது கொல்லப்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க அப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 9 பயணிகளும், லாஹூரிலிருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவுக்கு பயணம் செய்த பாகிஸ்தான் ராணுவத்தின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பலூசிஸ்தான் பயங்கரவாதிகள், அம்மாகாணத்தின் வழியாகப் பயணிக்கும் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களைக் கடத்தி கொலை செய்வது தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

It is reported that unidentified assailants abducted and shot dead passengers from Punjab province who were traveling on a bus in Pakistan's Balochistan province.

இதையும் படிக்க: அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க