மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
பாகுபலி மறுவெளியீட்டுத் தேதி!
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் பாகுபலி. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: விவாகரத்தா? நயன்தாரா பதில்!