3 கெட்ட குரங்குகள் வதந்திகளை பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்: நயன்தாரா குற்றச்சாட்ட...
பாகூா் தொகுதியில் வெள்ள பாதிப்பு: எதிா்க்கட்சித் தலைவா் பாா்த்தாா்
பாகூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி பாகூா் தொகுதியில் தென்பெண்ணை ஆற்று வெள்ளநீா் புகுந்து பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூா், கடுவனூா், பாகூா், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் பாகூா் பகுதி வெள்ள பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டாா். அவருடன் பாகூா் தொகுதி ரா. செந்தில்குமாா் எம்எல்ஏ , அனிபால் கென்னடி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனா்.
பாகூரில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளை அவா்கள் துரிதப்படுத்தினா். மேலும், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தனா்.