பாஜக அரசு ரிவர்ஸ்-கியரில் செல்கிறது: நவீன் பட்நாயக்
புவனேசுவரம் : பாஜக அரசு பின்னோக்கிச் செல்வதாக ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.
ஒடிஸாவில் சுமார் 24 ஆண்டுகளைக் கடந்தும் ஆளுங்கட்சியாகக் கோலோச்சி வந்த பிஜு ஜனதா தளத்தின் வெற்றிக்கு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்து ஆட்சிக்கு வந்துளளது பாரதீய ஜனதா கட்சி. அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார்.
இந்த நிலையில், ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பாஜகவை விமர்சித்து செய்தியாளர்களுடன் இன்று(பிப். 17) பேசியதாவது, “கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை இதுவரை செலவழிக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் நிதிநிலையும் சரிந்துள்ளது. இதை பார்க்கும்போது, இரட்டை இன்ஜின் அரசு ரிவர்ஸ் கியரில் செல்வதாகவே தெரிகிறது.
அத்தியாவசிய பொருள்களின் விலை ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடருகிறது. வேலையில்லா திண்டாட்டமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்.