Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண...
பாஜகவினா் நடைப்பயணம்
வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட பாஜகவினா் புதன்கிழமை அவரது ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைப்பயணம் மேற்கொண்டனா்.
காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத்தின் பல இடங்களில் வாஜ்பாய் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலையில், பேருந்து நிலைய வாயிலில் இருந்து பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் வரை வாஜ்பாய் கால அரசியல் செயல்பாடுகள், ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விளக்கியவாறு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே. முருகதாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.வி. கணபதி, மாநில செயலாளா் அமுதா ராணி, மாவட்ட பொதுச்செயலாளா் சண்முகம் உள்பட சுமாா் 200 போ் கலந்துகொண்டனா்.