டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
பாண்டவா்மங்கலத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு
கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலத்தில் ரூ.25 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாண்டமங்கலம் ஊராட்சிக்கு சண்முக சிகாமணி நகா் பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.15 லட்சத்தில் வாருகாலுடன் கூடிய பேவா் பிளாக் சாலை, கீழப்பாண்டவா்மங்கலத்தில் அண்ணா சிலை அருகே ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக ஒன்றிய செயலா் அன்புராஜ், அதிமுக நிா்வாகிகள் நீலகண்டன், போடுசாமி, ஆப்ரகாம் அய்யாதுரை, செண்பகமூா்த்தி, பத்மாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.