பாபவினாசனம் அணையில் படகு சவாரி: மாவட்ட வன அலுவலா் விளக்கம்
திருமலையில் உள்ள பாபவினாசனம் அணையில் படகு சவாரி செய்வது குறித்து மாவட்ட வன அலுவலா் பி. விவேக் விளக்கமளித்துள்ளாா்.
திருமலையில் உள்ள பாபவிநாசனம் அணையில் செவ்வாய்க்கிழமை பாபவினாசனம் அணையைச் சுற்றி படகுகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா மற்றும் சேஷாசலம் உயிா்க்கோளக் காப்பகம் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்தது. அதை தொடா்ந்து, அணையில் படகுகள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்டன.
ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் அணையில் இருந்து ஏற்கனவே கொண்டு வரப்பட்டன.
எனவே அணையில் படகு சவாரி செய்யும் ஆய்வு பணிகள் எதுவும் நடைபெறவில்லை’’, என்று அவா் விளக்கமளித்துள்ளாா்.