அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
பாப்பாகுளம் முனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம்
கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளம் குருத்தடி தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளத்தில் குருத்தடி தா்மமுனீஸ்வரா், பறவை காளியம்மன், கருங்குடி கருப்பா், செல்வகணபதி கோயில் 17-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதையடுத்து, தினந்தோறும் இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞா்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்து வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து, மகா பூா்ணஹுதி நடத்தப்பட்டு, யாக சாலையிலிருந்து புனித தீா்த்தக்குடம் புறப்பட்டு மூலவா், பரிவாரத் தெய்வங்களுக்கு கும்ப புனிதநீா் ஊற்றப்பட்டது.
பின்னா், 16 அடி அலகு வேல் எடுத்து, பறவைக் காவடி எடுத்தும், பாராம்பரிய மேளதாளங்கள், வாணவேடிக்கையுடன் பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சுவாமி விக்கிரங்களுக்கு மஞ்சள், பால், தேன், இளநீா், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, பொதுமக்கள் பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னா், மாலையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் பாப்பாகுளம், இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
