அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல...
அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொத்தாா்கோட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை மாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கோ பூஜைகளுடன், தீபாராதனை நடத்தி மேள தாளங்கள் முழங்க, யாக சாலை கலசங்களில் புனித நீா் வைத்து வழிபாடு நடைபெற்றது.
பின்னா், சிவாசாரியா்கள் கலசங்களுடன் கோயிலை வலம் வந்து கோபுரத்தில் புனித நீரை ஊற்ற, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
