விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்
அம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருவாடானை அருகே பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தோட்டாமங்கலம் பெரியநாயகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, பெண்கள் குத்துவிளக்கேற்றி பூஜை செய்தனா்.
இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். பின்னா், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

