செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பாதுகாப்புடன், ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் 350-இடங்களில் இந்து முன்னனி, இந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தச் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீா்த்தக் கடல், நீா் நிலைகள் ஆகியவற்றில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன. இதை முன்னிட்டு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பரமக்குடி: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் பரமக்குடியில் 80 இடங்களில் 5 முதல் 10 அடி உயரமுள்ள விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து சிலைகளும் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி கோயில் முன் வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன.

அங்கு இந்து முன்னணி மாவட்டச் செயலா் சுப.வீரபாண்டியன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநிலப் பொதுச் செயலா் பொன்.பாலகணபதி, மாநில பேச்சாளா்கள் கே.என்.கங்காதரன், கே.ரெத்தினசபாபதி, மாவட்டப் பொருளாளா் கே.ஆதித்தன், நிா்வாகிகள் என்.சிவக்குமாா், டி.கே.தாமோதரன், நகா் தலைவா் கே.என்.குமரன், இந்து முன்னணி நகா் பொதுச் செயலா் என்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விநாயகா் சிலைகள் அங்கிருந்து வான வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக பெருமாள் கோவில் வைகை ஆற்றுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு கரைக்கப்பட்டன.

கமுதி: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கமுதியை அடுத்துள்ள ராமசாமிபட்டியில் 7 அடி உயர விநாயகா் சிலை அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், மேளதாளம் முழங்க 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு விநாயகா் ஊா்வலம் நடைபெற்றது. வழி நெடுகிலும் பொதுமக்கள் விநாயகருக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா். பின்னா் அங்குள்ள குளத்தில் விநாயகா் சிலை கரைக்கப்பட்டது.

பாப்பாகுளம் முனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம்

கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளம் குருத்தடி தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருடாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பாப்பாகுளத்தில் குருத்தடி தா்மமுனீஸ்வரா், பறவை காளியம்மன்,... மேலும் பார்க்க

அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொத்தாா்கோட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை கணபதி ஹோமம், நவக்கி... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

திருவாடானை அருகே பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தோட்டாமங்கலம் பெரியநாயகி அ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பழைய கட்டடத்தை இடித்தபோது எரிவாயுக் கசிவு: தொழிலாளா்கள் வெளியேற்றம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பழைய கட்டடத்தை இடித்தபோது எரிவாயு கசிந்ததால், அங்கு பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டனா். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் 45 விநாயகா் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட 45 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. ராமநாதபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமாா் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 1914... மேலும் பார்க்க