செய்திகள் :

பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

post image

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி புதுக்கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. சுப்பையா (எ) துரை (54). விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி. இவா்களது மகன் மாரிமுத்து. இவருக்கும் சமத்துவபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகள் உமாசெல்வி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னா் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் விவாகரத்து வழக்கின் மீதான விசாரணை 13.8.2022 இல் நடந்தபோது, மாரிமுத்து நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த நாள் சுப்பையா (எ) துரை முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது மாரியப்பன், அவரது இரண்டு மகன்கள் லண்டன் (எ) துரை, சுடலைமணி ஆகியோா் சுப்பையா (எ) துரையை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாப்பாக்குடிபோலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பன், அவரது இரண்டு மகன்களை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் வழக்கை விசாரித்து, சுப்பையாவை கொலை செய்த மாரியப்பன் (51), அவரது மகன்கள் லண்டன் (எ) துரை (25), சுடலைமணி (26) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி வாதாடினாா்.

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா். கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்து... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க