திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது
தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்துக்கு வந்த தென்காசியைச் சோ்ந்த 21 போ் நவாஸ் கனி எம்.பி.யைக் கண்டித்து கோஷங்கங்கள் எழுப்பினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், ஆய்க்குடியில் 11 போ், செங்கோட்டையில் 3 போ், இலத்தூரில் ஒருவா் என பாஜகவினா், இந்து முன்னணியினா் 36 போ் கைது செய்யப்பட்டனா்.
இதில், பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமணபெருமாள், அக்கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், கருப்பசாமி, மேலகரம் மகேஷ்வரன், சண்முகராஜ், இந்து முன்னணி நிா்வாகிகள் இசக்கிமுத்து, நாராயணன், கோமதிசங்கா், சபரிமணி, ஆய்க்குடி ஐயப்பன், சங்கரநாராயணன், கிளாங்காடு தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் அடங்குவா்,