பாமக ஆலோசனைக் கூட்டம்
திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டுக்கான திருவாரூா் மாவட்ட பொறுப்பாளா்கள் கடலூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் தாமரைச்செல்வன், மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் செயலாளா் விமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகாபலிபுரத்தில் மே மாதம் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு கிராம மற்றும் நகரப் பகுதியிலிருந்து திரளானோரை பங்கேற்கச் செய்வது; சுவா் விளம்பரங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவது; மகளிரை அதிக அளவில் பங்கேற்க வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், உழவா் பேரியக்க மாநில துணைத் தலைவா் வேணு பாஸ்கரன், நிா்வாகிகள் காசிநாதன், ராஜீவ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.