செய்திகள் :

பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்

post image

அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ்பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப் பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர். அதில் ஒரு பசு நாள்தோறும் கூட்டத்தை விட்டு விலகிச் செல்வதை அறிந்த மேய்ப்பவன், பின்தொடர்ந்தான். அந்தப் பசு வேங்கை மரத்தடியில் தாமாகவே பால் சுரந்தது.

இந்த அதிசயத்தை அறிந்த ஊர் மக்கள்அங்குள்ள புற்கள், செடிகளை அகற்றியபோது, சுயம்பு லிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பக்தருக்கு அருள்வந்து, "மக்களுக்கு வழித்துணையாக விளங்குகிறேன். தனி கோயில் எழுப்பி பண்ணாரி அம்மனாக வழிபடுங்கள்' என தகவல் சொன்னது.

கருவறையில் கற்சிலையாய் அம்மன் அமர்ந்த கோலத்தில் வலப் புறமும்,இடப்புறமும் மேலிரு கரங்களும்,கீழிரு கரங்களும் தாங்கி நான்கு கரங்களுடன் எழிலோடு காட்சி தருகிறாள். இடது கீழ்க்கரத்தில் குங்குமக் கிண்ணம், மேல்கரத்தில் சங்கு,வலது கீழ்க்கரத்தில் உடைவாள்,மேல்கரத்தில் உடுக்கையும் தாங்கிய கோலம் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது.

கருவறை எதிரில் உள்ள மரம், அன்னை அமர்ந்த மரமாகப் போற்றப்படுகிறது. ஆண்களைக் காக்க வாளையும், பெண்களைக் காத்திட,குங்குமத்தையும் எந்த நேரமும் தன் கரங்களில் தாங்கி நிற்கிறாள் தெற்கு நோக்கிய சுயம்பு அம்மன். புற்று மண் பிரசாதம்.

மூலவரான அம்மன் தெற்கு முகமாக அமைந்துள்ளதால், பிரதான வாயிலும் அவ்வாறே அமைந்துள்ளது. அன்னை அமர்ந்த வேங்கை மரம் தலமரமாகவும், தெப்பக் கிணறு தீர்த்தமாகவும் அமைந்துள்ளன.

தீராத நோய்கள் தீர, உடல் குறைபாடுகள் நீங்க, திருமண வரம் பெற... என பல்வேறு வேண்டுதல்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அன்னையை நாடி வந்து பலன் பெற்றுச் செல்கின்றனர். பங்குனி மாதத்தில், பூக்குழி எனப்படும் குண்டம் தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.சத்தியமங்கலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது.

}பனையபுரம் அதியமான்

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)முயற்சிகள் முன்... மேலும் பார்க்க

சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் ... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும... மேலும் பார்க்க