தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும்.
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் 1974 -இல் நடைபெற்றது.
மூலவர் ஐயப்பன். விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்டோரின் சந்நிதிகளும் உள்ளன. கிருஷ்ண சிலாவில் செய்யப்பட்ட குருவாயூரப்பனின் தனித்துவமான சிலை குருவாயூரப்பனிலிருந்து கொண்டு வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது "சிறிய குருவாயூர்' என்றும் அழைக்கப்படுகிறது.
சபரிமலையைப் போன்று, மண்டல பூஜைகள், மகர விளக்கு பூஜைகள், யாத்திரைகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கோயிலின் பொன் விழா சொப்னம் ஹாலில் 2025 மார்ச் 23}இல் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் நடைபெறுகிறது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் பி.எஸ்.பிரசாந்த், எஸ்.வேதாந்தம்ஜி, எஸ்.ஆர்.எம். பல்கலை. துணை வேந்தர் ரவி பச்சமுத்து, ஸ்ரீ ஐயப்பப் பக்த சபா தலைவர் என்.கே.மூர்த்தி மற்றும் சபரிமலை கோயில் நிர்வாகத்தினர் பங்கேற்கின்றனர்.