LSG vs PBKS: 'குறி வெச்சா இரை விழும்!' - லக்னோவை எப்படி வீழ்த்தினார் ஸ்ரேயாஷ் ஐய...
திருமணத் தடை நீங்க...
திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவர கோயிலாகும்.
ஒருமுறை முதலாம் ராஜேந்திர சோழன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக் கொடி நாட்டி திரும்பியபோது, பாலை மரங்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதியில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது ஒரு பாலை மரத்தில் பிணைக்கபட்டிருந்த யானை மூர்ச்சை அடைந்து விழுந்தது. உடனே அந்த மரத்தை வெட்டுமாறு மன்னர் உத்தரவிட்டார். கோடாரிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. உடனே மரத்தை வெட்டுவதை நிறுத்தினர். அப்போது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க வடிவிலான இறைவன் தலை மீது ரத்தம் வெளிப்பட்டது.
உடனே மன்னர் அங்கு கோயிலையும் நிறுவினார். இந்தக் கோயிலே தூங்கானை மாடமாக அமைந்த திருப்பாலீசுவர பெருமான் கருவறைக் கோயிலாகும். கோடாரியால் இடப்பட்ட தழும்பை இன்றும் காண முடிகிறது. மூலவரை வலமாகக் கொண்ட லோகாம்பிகா தேவி சன்னதி அமைந்துள்ளது.
தேவர்களும். அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்த நாள் அமாவாசை. ஆலகாலவிஷம் வெளிப்பட்ட நாள் அமாவாசைக்குப் பத்தாம் நாளாகிய தசமி திதி. அமுதம் கிடைத்தது பதினோராம் நாளாகிய ஏகாதசி திதி. அசுரர்களைப் புறக்கணித்து அமுதத்தை உண்ணுவதற்கு மறைவான இடம் தேடி தேவர்கள் அலைந்த நாள் பன்னிரெண்டாம் நாளாகிய துவாதசி. அவர்கள் அமுதத்தை உண்ணுவதற்கு தேர்ந்தெடுத்த மறைவான இடம் இன்றைய திருப்பாலைவனம் பகுதியாகும்.
சிவன் பூசித்த நாள் "திரயோதசி' . அதாவது பதிமூன்றாம் நாளான மாலை 4.30 முதல் 6.30 மணி வரை சுக்லபட்சத்துப் பிரதோஷ காலம். அந்த நேரத்தில் நந்தி தேவரின் தலை மீது நின்று "சந்தியாத் தாண்டவம்' எனும் நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் காணுமாறு ஆடியதாக புராணம் புகழ்கிறது.
இங்கு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் எல்லா நன்மைகளும் கைக்கூடும் திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்.
பொ.ஜெயச்சந்திரன்