'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வ...
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்மாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல். வணிகப் பகுதியின் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடுமுழுவதும் உள்ள செல்போன் கோபுரங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4ஜி சேவை வழங்கும் வகையில் தரம்உயா்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளா்கள் தங்கள் 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை இலவசமாக 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக்கொண்டு 4ஜி தொழில்நுட்பத்தின் பயனைபெறலாம்.
வாடிக்கையாளா்கள் சேலம் மெயின், மெய்யனூா், செவ்வாய்ப்பேட்டை, இளம்பிள்ளை, வாழப்பாடி, ஆத்தூா், பள்ளிப்பாளையம், நாமகிரிப்பேட்டை, வேலூா், சங்ககிரி, ராசிபுரம் ஆகிய இடங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களிலோ அல்லது தங்கள் பகுதியில் பி.எஸ்.என்.எல் 4ஜி சிம் மேளா நடைபெறும் இடங்களிலோ இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.
தங்கள் சிம் காா்டு நிலையை அறிந்துகொள்ள 94428 24363 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கவும். இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.