சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
பி.வி. சிந்துவுக்கு திருமணம்!!
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு திருமணம் உறுதியாகியுள்ளது.
சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த போசிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இதையும் படிக்க : உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, வைஷாலி பங்கேற்பு
இரு குடும்பத்தினரும் நீண்ட கால பழக்கமுடையவர்கள் என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக இருவரின் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சிந்துவின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்தாண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ள பி.வி.சிந்து ஜனவரி முதல் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இந்த மாதத்துக்குள் திருமணத்தை முடிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வருகின்ற 20ஆம் தேதி முதல் திருமணத்துக்கான நிகழ்வுகள் தொடங்கவுள்ளதாகவும், உதய்ப்பூரில் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் டிசம்பர் 24ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில், பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் உலகம் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து பெற்றார். இதுவரை மொத்தம் 5 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது தடகள வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, ஒலிம்பிக் பாட்மின்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.