செய்திகள் :

பிக் பாஸ்: 13வது வார நாமினேஷன் பட்டியல்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 13வது வாரத்தில் 8 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் 10 பேர் உள்ள நிலையில், அதில் 8 பேர் வெளியேற வேண்டும் என போட்டியாளர்கள் வாக்களித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 85வது நாளை எட்டியுள்ளது. தொடக்கத்தில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தற்போது 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.

இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று நாமினேஷன் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த வாரத்தில் நாமினேஷன் (பிக் பாஸ் வீட்டில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கருதி போட்டியாளர்கள் வாக்களிப்பது) செய்யும் நடைமுறையில், அதிக நபர்களால் மஞ்சரி நாமினேஷன் செய்யப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து ரயான், ராணவ், வி.ஜே. விஷால், தீபக், அருண் பிரசாத், ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

செளந்தர்யா, முத்துக்குமரன் மட்டும் யாராலும் நாமினேஷன் செய்யப்படவில்லை.

நாமினேஷன் பட்டியல் உள்ளவர்கள் மக்களிடம் அதிக வாக்குகளைப் பெறும் போட்டியாளர் காப்பாற்றப்படுவார். மிகக்குறைந்த வாக்குகளைப் பெறும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்று இந்த வாரமும் இரு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: டாப் 10 போட்டியாளர்கள் பட்டியல்!

ஷங்கர் இப்படி பேசியிருக்கக் கூடாது: அனுராக் காஷ்யப்

இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தம் தருவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ராம் சரண் மற்றும் கியா... மேலும் பார்க்க

பொங்கலுக்கு வெளியாகும் 8 திரைப்படங்கள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 8 திரைப்படங்கள் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.அடுத்த வார இறுதியில் இருந்து பொங்கல் விடுமுறை தொடங்குவதால், வணங்கான், கேம் சேஞ்சர், படைத் தலைவன் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கா... மேலும் பார்க்க

நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கிய நேசிப்பாயா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்குமா பட்டினப்பாலை?

புதிய முயற்சிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு களம் இறங்குகிறது பட்டினப்பாலை என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் பிரதாப் ராஜா இயக்கத்தில், யு கேன் புர... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி இதுதானா?

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படதின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள... மேலும் பார்க்க

மிகப்பெரிய பட்ஜெட்! ஆவேஷம் இயக்குநரின் கதையை இயக்கும் சிதம்பரம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக... மேலும் பார்க்க