செய்திகள் :

கவனம் ஈர்க்குமா பட்டினப்பாலை?

post image

புதிய முயற்சிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு களம் இறங்குகிறது பட்டினப்பாலை என்ற திரைப்படம்.

அறிமுக இயக்குநர் பிரதாப் ராஜா இயக்கத்தில், யு கேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.வி.சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கிறார்.

கிராமத்தில் நடக்கும் ஒரு கொலையைச் சுற்றி அரங்கேறும் சம்பவங்களை உள்ளடக்கிய சுவாரசியமான திரைக்கதையை கொண்ட படமாக உருவாகியுள்ளது பட்டினப்பாலை.

இத்திரைப்படத்துக்கு கெவின் இசையமைத்துள்ளார். இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதுடன், படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பிரீத்தி, வேலப்பன், துவாரகேஷ், பாலசுப்பிரமணி, ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, குப்பம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளன. விரைவில் திரைக்கு வரும் இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2024இல் பல சிறிய பட்ஜெட் படங்கள் கவனம் பெற்றன. அந்த வரிசையில் பட்டினப்பாலை கவனம் ஈர்க்குமா எனப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குபேரா வெளியீடு எப்போது?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்... மேலும் பார்க்க

கேம் சேஞ்சர்: 5 பாடலுக்கு ரூ. 75 கோடி பட்ஜெட்!

கேம் சேஞ்சர் பாடல்களின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் தளபதி வசூல் இவ்வளவா?

தளபதி திரைப்படம் மறுவெளியீட்டில் லாபகரமான தொகையை வசூலித்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் - ரஜினி - மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.படத்தில் இடம்பெற்ற ... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை ’பிரேக் அப் டா’ பாடல்!

காதலிக்க நேரமில்லை படத்தின் பிரேக் அப்டா பாடல் வெளியானது. காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநி... மேலும் பார்க்க

2024 இப்படித்தான் இருந்தது... நிகிலா விமல் பகிர்ந்த விடியோ!

நடிகை நிகிலா விமல் 2024 ஆம் ஆண்டு குறித்து நகைச்சுவை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.2009 முதல் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நிகிலா விமல். 2016-ல் வெளியான வெற்றிவேல் படம் மூலமாகத் தமிழில் அறிமு... மேலும் பார்க்க