வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
மிகப்பெரிய பட்ஜெட்! ஆவேஷம் இயக்குநரின் கதையை இயக்கும் சிதம்பரம்!
மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.
இதையும் படிக்க: புற்றுநோய் சிகிச்சை.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் சிவராஜ்குமார்
தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில், நடிகர் அனில் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரம் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் கதை எழுதியுள்ளார்.
மஞ்ஞுமல் பாய்ஸ் கூட்டணியான ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், கலை இயக்குநர் அஜயன் சல்லிசேரி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
அறிவிப்பு போஸ்டரை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் மலையாளத்தின் மாஸ்டர்பீஸ் என்றும் மிகப்பெரிய கனவு என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.