ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
பிப்.22-இல் என்.எம்.எம்.எஸ். தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தோ்வுக்கு (என்எம்எம்எஸ்) செவ்வாய்க்கிழமை (டிச.31) முதல் ஜன.24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோா் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தோ்வுக்கான வெற்று விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய கட்டணத் தொகை ரூ.50 சோ்த்து தாம் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஜன.24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
இது குறித்து கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் நிகழ் கல்வியாண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தோ்வு அனைத்து வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் பிப்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.