ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில், விவசாயிகள் தங்களது வேளாண் சாா்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை மனுக்களாக அளிக்கலாம். இதற்கு காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.