Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!
உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘சந்தோஷ்’ திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
பிரிட்டன் - இந்திய திரைப்பட இயக்குநரான சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் ‘சந்தோஷ்’. இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பிரிட்டன் சார்பில் அனுப்பப்பட்டது.
இந்தியாவை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் வட இந்தியாவில் காவல்துறையில் இணையும் விதவை பெண், ஒரு தலித் சிறுமியின் கொலையை விசாரிப்பது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பேசியுள்ளது. இதில், சஹானா கோஸ்வாமி நடித்துள்ளார்.
இந்த நிலையில், சந்தோஷ் திரைப்படத்தை இந்தியத் திரையரங்கங்களில் வெளியிட மத்திய தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பெண் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு, காவல்துறையின் வன்முறை தொடர்பான சித்தரிப்புகள் ஆகியவற்றை பிரச்னைக்குரியதாக தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த முடிவு தனக்கு மிகவும் ஏமாற்றம் மற்றும் மனவேதனை அளிப்பதாகக் கூறிய படத்தின் இயக்குநர் சந்தியா சூரி, “இது எங்கள் குழுவினருக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கின்றது. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் இந்திய சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் வெளியான படங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்பட்டுள்ளதா?
காவல்துறையினர் பற்றி எடுக்கப்பட்ட மற்ற படங்களைப் போல எங்களின் படம் வன்முறையை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்படவில்லை. இதில், பிரச்னைக்குரியதாக எதுவுமே இல்லை” என்று தெரிவித்தார்.